அமெரிக்காவின் பழைய சதி யாரையும் ஏமாற்ற முடியாது!
2022-05-18 19:30:39

75ஆவது உலகச் சுகாதார மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு, இம்மாநாட்டில் தைவானின் பங்கேற்புக்கு ஆதரவளிக்கும் பழைய சதியை அமெரிக்க அரசியல்வாதிகள் மறுபடியும் செய்துள்ளனர்.  தைவான் இம்மாநாட்டில் பங்கேற்கும் வகையில், உலகச் சுகாதார மாநாட்டின் பார்வையாளர் பதவியைத் தைவான் மீண்டும் பெறுவதற்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் உதவியளிக்க வேண்டும் என்ற மசோதாவில் அமெரிக்க தலைவர்கள் அண்மையில் கையொப்பமிட்டுள்ளனர். சீன உள்விவகாரத்தில் கடுமையாகத் தலையிட்டு ஒரே சீனா கொள்கை மற்றும் சீன-அமெரிக்க 3 கூட்டறிக்கைகளின் விதிக்குக் கடுமையாகப் புறம்பான செயல் இதுவாகும். ஒரே சீனா கொள்கை உலகளவில் பொதுவாக அங்கீகாரம் பெற்ற சர்வதேச கோட்பாடு மற்றும் பொது அறிவாகும். அமெரிக்க அரசியல்வாதிகள் என்ன சதி செய்தாலும், இந்தக் கொள்கை அசைவின்றி உறுதியாக நிற்கும்.

உலகச் சுகாதார அமைப்பில் இறையாண்மை கொண்ட நாடுகள் மட்டுமே பங்கேற்க முடியும். சீனாவின் தைவான் பிரதேசம் உலகச் சுகாதார அமைப்பின் நிகழ்ச்சியில் பங்கேற்க, ஒரே சீனா கொள்கையின் அடிப்படையில் தான் பங்கேற்க வேண்டும்.

தைவான் பிரச்சினை சீன-அமெரிக்க உறவில் மிக முக்கியமான மற்றும் உணர்ச்சிமிக்க பிரச்சினையாகும். சீனாவின் மைய நலனுடன் இது தொடர்புடையது. சீனா மீதான அரசியல் வாக்குறுதியை அமெரிக்கா கடைப்பிடிக்க வேண்டும். இரு நாட்டுத் தலைவர்களின் பொது கருத்துக்களை அமலுக்குக் கொண்டு வர வேண்டும். தைவான் பிரச்சினையில் சொல்லில் ஒன்று செயலில் வேறொன்று என்ற சதி செய்தால், அமெரிக்காவின் அரசியல் செல்வாக்கு தொடர்ந்து சீர்குலைக்கப்படும். தைவான் சுதந்திரத்துக்கு ஆதரவளிக்கும் எந்த செயலும் சீனாவால் கடுமையாக எதிர்க்கப்படும். இந்தச் செயல் தோல்வியடைவதும் உறுதி.