அசுவுஸ்டோல் இரும்புருக்கு தொழிற்சாலையிலிருந்து மக்கள் வெளியேற்றம் முடிந்தது
2022-05-18 15:52:06

உக்ரைனின் மரிவுபோல் நகரில் அமைந்துள்ள அசுவுஸ்டோல் இரும்புருக்கு தொழிற்சாலையில் சிக்கியுள்ள உக்ரைன் படைவீரர்களும், அசுவ் பட்டாலியன் வீரர்களும் 16ஆம் நாள் சரணடைந்துள்ளனர். இதுவரை இத்தொழிற்சாலையிலிருந்து காயமுற்றோர் அனைவரும் வெளியேறியுள்ளனர் என்று ரஷியத் தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கொனஷன்கோவ் 17ஆம் நாள் தெரிவித்தார்.

இதற்கிடையில், ஸ்வீடன் தலைமை அமைச்சர் அண்டசன், பின்லாந்து அரசுத் தலைவர் நிநிஸ்டோ ஆகியோர் கூட்டாக நடத்திய ஒரு செய்தியாளர் கூட்டத்தில், நேட்டோவில் சேரும் விண்ணப்பத்தை 18ஆம் நாள் சேர்ந்து தாக்கல் செய்வதாக அறிவித்தனர். அவர்கள் 19ஆம் நாள் வாஷிங்டனில் அமெரிக்க அரசுத் தலைவர் ஜோ பைடனைச் சந்தித்து, இவ்விண்ணப்பம் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல் கடந்த உறவு தொடர்பான பிரச்சினைகள் பற்றி விவாதிக்கவுள்ளனர்.

பின்லாந்து, ஸ்வீடன் ஆகிய நாடுகள், நேட்டோவில் சேரும் முடிவு, வரலாற்றில் நிகழும் மிக தவறான முடிவு என்று ரஷிய வெளியுறவு துணை அமைச்சர் 17ஆம் நாள் தெரிவித்தார்.