நவீனப் பொருட்களைப் போன்ற தொல் பொருட்கள்
2022-05-18 10:18:52

மே 18ஆம் நாள் சர்வதேச அருங்காட்சியகத் தினமாகும். சீனாவின் சான்சிங்தூய் என்னும் சிதிலத்தில் கண்டறியப்பட்ட விலங்கு வடிவிலான வெண்கலத் தொல் பொருள் ஒன்று இன்று முதல்முறையாக காட்சிக்கு வைக்கப்பட்டது. நவீன மின்சார நாய் ஒன்றைப் போன்ற இந்தத் தொல் பொருள் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதைத் தவிர, சான்சிங்தூய் என்னும் சிதிலத்தில் நவீனப் பொருட்களைப் போன்ற பல்வேறு தொல் பொருட்கள் கண்டறியப்பட்டன. 3000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறுடைய இந்தத் தொல் பொருட்களிலிருந்து தனிச்சிறப்புடைய ஈர்ப்பாற்றலை மக்கள் மேலும் உணர்ந்து கொள்ள முடிகிறது.