பிரிக்ஸ் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் ஷிச்சின்பிங் உரை
2022-05-19 19:52:45

பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த வெளியுறவு அமைச்சர்கள் மே 19ஆம் நாள் காணொலி வாயிலாகக் கூட்டம் நடத்தினர். இந்த கூட்டத்தின் துவக்க விழாவில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் காணொலி வழியில் உரை நிகழ்த்தினார்.

அப்போது ஷிச்சின்பிங் கூறுகையில்

சர்வதேச சூழலில், நிலையற்ற உறுதியற்ற மற்றும் பாதுகாப்பற்ற காரணிகள் அதிகரித்துள்ளன. இருப்பினும், அமைதி மற்றும் வளர்ச்சி என்ற காலஓட்டத்தின் கருப்பொள் மாறவில்லை. இதற்காக, சர்வதேச சமூகத்தில் ஆக்கப்பூர்வமான சக்தியாக விளங்கும் பிரிக்ஸ் நாடுகள், நடைமுறை நடவடிக்கைகளை மேற்கொண்டு அமைதி மற்றும் வளர்ச்சியை மேம்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

பிரிக்ஸ் நாடுகள், ஒன்றன் மீதான ஒன்றின் அரசியல் நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரித்து, முக்கிய சர்வதேச மற்றும் பிராந்திய விவகாரங்கள் குறித்து நெருங்கிய ஒருங்கிணைப்பை மேற்கொண்டு, தத்தமது மைய நலன்களைக் கவனிப்பதோடு,  மேலாதிக்க ரீதியிலான அரசியலை எதிர்த்து, பனிப்போர் சிந்தனை மற்றும் குழு பகைமையைத் தடுக்க வேண்டும் என்றார் அவர்.

வளர்ச்சி, வளரும் நாடுகளுக்கு கூட்டுக் கடமையாகும். தற்போது பல்வகை இடர்பாடுகளையும் அறைகூவல்களையும் எதிர்கொள்ளும் போது, வளரும் நாடுகள் ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும். இது, முன்பு எந்த காலத்தையும் விட முக்கியமானது என்று ஷிச்சின்பிங் தனது உரையில் வலியுறுத்தினார்.

பிரிக்ஸ் அமைப்பின் ஐந்து உறுப்பு நாடுகள், மேலதிக வளர்ந்து வரும் நாடுகளுடன் பரிமாற்றம் மேற்கொண்டு, நம்பிக்கையை மேம்படுத்தி, ஒத்துழைப்பு அளவை விரிவாக்க வேண்டும் என்றும், பகிர்வு எதிர்காலம் கொண்ட சமூகத்தை உருவாக்குவது என்ற கனவை நிறைவேற்றுவதில் அதிக பங்கு ஆற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.