பிரிக்ஸ் அரசியல் கட்சிகள், சிந்தனை கிடங்குகள் மற்றும் அரசுசாரா அமைப்புகள் மன்றக்கூட்டம் துவக்கம்
2022-05-19 21:03:55

பிரிக்ஸ் அமைப்பின் அரசியல் கட்சிகள், சிந்தனை கிடங்குகள் மற்றும் அரசுசாரா அமைப்புகளின் மன்றக்கூட்டம் மே 19ஆம் நாள் காணொலி வழியாக பெய்ஜிங்கில் தொடங்கப்பட்டது. இந்த மன்றக் கூட்டத்திற்கு சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் வாழ்த்து தெரிவித்தார்.

பிரிக்ஸ் நாடுகள் உள்பட உலக நாடுகளுடன் இணைந்து, ஐ.நா. 2030ஆம் ஆண்டு நிலையான வளர்ச்சி நிகழ்ச்சி நிரலின் நடைமுறையாக்கத்தை வேகப்படுத்தி, உலக வளர்ச்சிச் சமூகத்தை கூட்டாக உருவாக்க சீனா விரும்புகிறது என்று ஷிச்சின்பிங் வாழ்த்துக் கடிதத்தில் சுட்டிகாட்டினார்.

பிரிக்ஸ் நாடுகள் மற்றும் வளரும் நாடுகளின் அரசியல் கட்சிகள், சிந்தனை கிடங்குகள் மற்றும் அரசுசாரா அமைப்புகள் பொறுப்புகளை நிறைவேற்றி, தொடர்பு மற்றும் பரிமாற்றத்தை அதிகரித்து, உலகின் கூட்டு வளர்ச்சியை நனவாக்கும் வகையில் தங்களது ஞானம் மற்றும் சக்தி ரீதியிலான பங்களிப்பை ஆற்ற வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்