பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்த பிபிசி செய்தி நிறுவனம்
2022-05-19 10:26:18

20 நாட்களுக்கு முன் பாகிஸ்தான் கராச்சி பல்கலைக்கழகத்தில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சீனாவைச் சேர்ந்த 3 ஆசிரியர்கள் உயிரிழந்தனர். ஒருவர் காயமுற்றார். இச்சம்பவம் உலகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஐ.நா பாதுகாப்பவை இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தது. ஆனால், பிபிசி செய்தி நிறுவனம் அண்மையில் வெளியிட்ட கட்டுரையில், இப்பயங்கரவாதத் தாக்குதல் தொடுப்பவர்களை அழகுப்படுத்தி, அவர்களது செயல்களுக்கு சாக்குபோக்குகளைக் கண்டறிய முயன்றது.

மேலை நாடுகளில் செல்வாக்கு கொண்ட செய்தி ஊடகங்களில் ஒன்றான பிபிசி செய்தி நிறுவனம், பயங்கரவாதிகளுக்கு வெளிப்படையாக ஆதரவு அளிப்பது, அறநெறிக்கும் சர்வதேச நேர்மைக்கும் புறம்பானது.

கடந்த சில ஆண்டுகளாக, சில மேலை நாடுகள் சீனாவுக்கான நெடுநோக்குப் போட்டி திட்டங்களுடன் ஒத்துழைப்பு செய்யும் விதம், மேலை நாடுகளின் செய்தி ஊடகங்கள் பொய் தகவல்களைப் பரவி, சீனாவின் மீது தீய நோக்கத்துடன் பழி கூறி வருகின்றன. புவியமைவு மோதல்களைத் தூண்டிய கருவிகளாகவும், உலக அமைதியைச் சீர்குலைப்பதற்குத் துணை இருப்பவர்களாகவும் இந்தச் செய்தி ஊடகங்கள் மாறியுள்ளன.