இந்தியாவில் பணவீக்கம் 15.08 சதவீதம் உயர்வு
2022-05-19 16:12:38

இந்தியாவில் மொத்த விலை குறியீட்டு எண் பணவீக்க விகிதம் ஏப்ரலில் 15.08 சதவீதமாக உயர்ந்து, புதிய உச்சத்தை எட்டியதாக வணிக மற்றும தொழில் அமைச்சகம் 17ஆம் நாள் தெரிவித்தது. முன்னதாக, மார்ச் திங்களில், பணவீக்க விகிதம் 14.55 சதவீதம் பதிவாகியது.

கனிம எண்ணெய், உலோகங்கள், கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு, உணவுப் பொருட்கள், வேதிப்பொருட்கள் உள்ளிட்டவற்றின் விலை உயர்வே பணவீக்க உயர்வுக்கு முக்கியக் காரணம் என்று கூறப்பட்டுள்ளது.