யாங்சியேச்சு மற்றும் சல்லிவனின் தொடர்பு
2022-05-19 12:31:03

மே 18ஆம் நாள், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும் மத்திய வெளிவிவகார ஆணைய அலுவலகத்தின் தலைவருமான யாங்சியேச்சு, அமெரிக்கத் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவனுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.

சீன-அமெரிக்க உறவு குறித்து சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், அமெரிக்க அரசுத் தலைவர் பைடென் ஆகியோர், முக்கிய ஒத்த கருத்துக்களை எட்டியுள்ளனர். இரு தரப்புகளும் அந்த கருத்துக்களைப் பயனுள்ள முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும். அமெரிக்கா கூறிய படி நடந்து கொள்ள வேண்டும். கருத்து வேற்றுமைகளை உரிய முறையில் கட்டுப்படுத்தி, ஆக்கபூர்வ பங்கு ஆற்ற வேண்டும். இரு நாட்டு உறவு, சீரான மற்றும் நிதானமான வளர்ச்சிக்கான சரியான பாதைக்கு மீண்டும் திரும்புவதை முன்னேற்ற வேண்டும் என்றும் யாங்சியேச்சு தெரிவித்தார். மேலும், உக்ரைன், கொரிய தீபகற்ப நிலைமை முதலிய சர்வதேசப் பிரச்சினைகள் குறித்து அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.