அமெரிக்க நுகர்வோர் மற்றும் நிறுவனங்களின் நலன்களுக்கு பொருந்தியது – கூடுதல் வரி ரத்து
2022-05-19 16:59:12

சீனப் பொருட்கள் மீது விதிக்கப்பட்ட கூடுதலான சுங்க வரி சில பகுதியாக ரத்து செய்யப்படும் என அமெரிக்க நிதி அமைச்சர் ஜேனட் எலன் 18ஆம் நாள் கருத்துத் தெரிவித்தார்.

இந்த தகவல் குறித்து சீன வணிகத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஷூஜுயேடிங் 19ஆம் நாள் கூறுகையில்,

தற்போது பணவீக்க உயர்வு கண்டுள்ள சூழலில், சீனப் பொருட்கள் மீது கூடுதலாக வசூலிக்கப்படும் சுங்க வரியை அமெரிக்கா ரத்து செய்தால், அமெரிக்க நுகர்வோர் மற்றும் நிறுவனங்களின் நலன்களுக்குப பொருந்தியது. அது, அமெரிக்கா மற்றும் சீனா, உலகிற்கு கூட சாதகமாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.