பிரிக்ஸ் நாடுகள் மற்றும் வளரும் நாடுகள் இடையே பேச்சுவார்த்தை
2022-05-20 16:30:14

பிரிக்ஸ் நாடுகள் மற்றும் வளரும் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மே 19ஆம் நாளிரவு காணொலி வழியாகப் பேச்சுவார்த்தை நடத்தினர்.  சீனா, தென் ஆப்பிரிக்கா, பிரேசில், ரஷியா, இந்தியா ஆகிய பிரிக்ஸ் நாடுகளை தவிர, கசகஸ்தான், சௌதி அரேபியா, அர்ஜெண்டினா, எகிப்து, இந்தோனேசியா உள்பட நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும் இதில் பங்கேற்றனர். 

இப்பேச்சுவார்த்தைக்கு தலைமை தாங்கிய சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ கூறுகையில் பிரிக்ஸ் பிளஸ் என்ற அளவில் வெளியுறவு அமைச்சர் நிலைப் பேச்சுவார்த்தை நடத்துவது இதுவே முதன்முறையாகும். இது, பிரிக்ஸ் நாடுகள், பிற வளரும் நாடுகளுடனான ஒத்துழைப்பை விரிவாக்குவதற்கு முக்கியத்துவம் வாய்ந்த்தது என்று குறிப்பிட்டார