ரஷிய எரியாற்றலிருந்து விலகும் ஐரோப்பிய ஒன்றியம்
2022-05-20 10:16:23

சுமார் 30 ஆயிரம் கோடி யூரோ மதிப்புள்ள ஒரு திட்டத்தை ஐரோப்பிய ஆணையம் 18ஆம் நாள் வெளியிட்டது.

இத்திட்டத்தின்படி தற்போது முதல் 2027ஆம் ஆண்டு வரை, ஐரோப்பிய ஒன்றியம் ரஷியாவின் புதை படிவம் எரிபொருட்களைச் சார்ந்திருப்பதை படிப்படியாக விலகவுள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, தூய்மையான ஆற்றலுக்கான மாற்றத்தையும் ஐரோப்பிய ஒன்றியம் விரைவுபடுத்தும்.

புதிய ரக காரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தவும் பொருளாதார மீட்சிக்காகவும் அமைக்கப்பட்ட 75 ஆயிரம் கோடி யூரோ மீட்பு நிதியிலிருந்து இத்திட்டத்துடன் தொடர்புடைய நிதி முக்கியமாக வரும்.

எகிப்து, இஸ்ரேல், நைஜீரியா முதலிய நாடுகளில் இருந்து இயற்கை எரிவாயு இறக்குமதி செய்வதை அதிகரிக்கும் என்றும் இந்த முதலீட்டுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.