சீன மற்றும் கிழக்கு திமோர் அரசுத் தலைவர்களின் தொடர்பு
2022-05-20 16:09:52

கிழக்கு திமோர் சுதந்திரத்தை மீட்டெடுத்ததன் 20ஆவது ஆண்டு நிறைவையும், சீனாவுக்கும் கிழக்கு திமோருக்குமிடையிலான தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 20ஆவது ஆண்டு நிறைவையும் கொண்டாடும் வகையில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், கிழக்குத் திமோர் அரசுத் தலைவர் ஹோர்டா ஆகியோர் மே 20ஆம் நாள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து செய்தி அனுப்பினர்.

கடந்த 20 ஆண்டுகளில், இரு நாட்டு உறவில் சீரான நிதானமான வளர்ச்சிப் போக்கு காணப்பட்டு வருகின்றது. ஹோர்டாவுடன் இணைந்து, இரு நாடுகளின் பன்முக ஒத்துழைப்புக் கூட்டாளி உறவை புதிய கட்டத்துக்கு முன்னெடுத்து, இரு நாடுகளுக்கும் இரு நாட்டு மக்களுக்கும் நன்மை பயக்க விரும்புவதாக ஷிச்சின்பிங் தெரிவித்தார்.

பிரதேச மற்றும் உலகத்தின் அமைதியையும் நிதானத்தையும் மேம்படுத்துவதில் சீனா ஆற்றிய முக்கிய பங்குகளைக் கிழக்கு திமோர் பாராட்டுகின்றது. சீனாவுடன் இணைந்து, இரு நாட்டு நட்பையும் ஒத்துழைப்பையும் அதிகரிக்க விரும்புகின்றது என்று ஹோர்டா தெரிவித்தார்.