வாங்யீ தலைமையில் பிரிக்ஸ் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை
2022-05-20 10:26:42

சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங்யீ மே 19ஆம் நாளிரவு பெய்ஜிங்கில் இருந்தவாறு, பிரிக்ஸ் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் காணொளி பேச்சுவார்த்தைக்குத் தலைமை தாங்கினார். தென்னாப்பிரிக்கா, பிரேசில், ரஷியா, இந்தியா ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் இதில் பங்கெடுத்தனர்.

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் இப்பேச்சுவார்த்தைக்கு வழங்கிய காணொளி உரை அப்போது முதலில் ஒளிபரப்பப்பட்டது. இது குறித்து வாங்யீ கூறுகையில், நடப்பு பேச்சுவார்த்தையின் முக்கியத்துவத்தை அரசுத் தலைவர் ஷி வெகுவாகப் பாராடி, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி பற்றி விளக்கிக் கூறியதோடு, பிரிக்ஸ் அரசியல் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான முக்கிய ஆலோசனையையும் முன்வைத்து, எங்களுக்கும் தெளிவாகத் திசை காட்டியுள்ளார் என்று தெரிவித்தார்.

கடந்த 5 ஆண்டுகளாக பிரிக்ஸ் நாட்டுத் தலைவர்களின் தலைமையில், பொது அக்கறை உள்ள சர்வதேச விவகாரங்கள் குறித்து கூட்டு குரல் எழுப்பி, 5 நாடுகளின் பொது நலன்களைப் பேணிக்காத்து வருகிறோம் என்றும் புதிய அறைகூவல்களை எதிர்கொண்டு, பொது பாதுகாப்பு, கூட்டு வளர்ச்சி, மனிதகுலத்தின் உடல்நலம், உலக மேலாண்மை ஆகியவற்றுக்காக பாடுபட வேண்டும் என்றும் வாங்யீ குறிப்பிட்டார்.

நடப்பு பேச்சுவார்த்தையில் பங்கெடுத்த வெளியுறவு அமைச்சர்கள், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் உரைக்கு நன்றி தெரிவித்ததோடு, நடப்பு தலைவர் பதவியில் இருக்கும் சீனா மேற்கொண்டுள்ள ஆக்கப்பூர்வமான பயனுள்ள பணிகளையும் வெகுவாகப் பாராட்டினர்.

உக்ரைன், ஆப்கான் உள்ளிட்ட சூடான பிரதேசப் பிரச்சினைகள் குறித்தும் அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

சர்வதேச நிலைமையின் புதிய சிறப்பம்சம் மற்றும் அறைகூவல்களை எதிர்கொண்டு பிரிக்ஸ் நாடுகளின் ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது என்ற கூட்டறிக்கை இப்பேச்சுவார்த்தையில் வெளியிடப்பட்டது.