இணைப்பு தான் உலகப் பொருளாதாரம் நெருக்கடியிலிருந்து விடுபட உதவுகிறது
2022-05-20 16:05:42

உலக வர்த்தக முதலீட்டு முன்னேற்ற உச்சி மாநாட்டில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 18ஆம் நாள் காணொலி வாயிலாக உரை நிகழ்த்தினார். அப்போது, எதிர்ப்புக்குப் பதிலாக பேச்சுவார்த்தையிலும், துண்டிப்புக்குப் பதிலாக, இணைப்பிலும் ஊன்றி நிற்க வேண்டும். நியாயம் மற்றும் நீதி என்ற கோட்பாட்டில் உலக நிர்வாக அமைப்புமுறையின் சீர்திருத்ததுக்கு வழிகாட்ட வேண்டும் என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார்.

புவிசார் அரசியல் கொந்தளிப்பு மற்றும் கோவிட்-19 பவரல் காரணமாக, பன்னாட்டுச் சமூகம் மற்றும் பொருளாதாரத்துக்கு விதவிதமான அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியம் புதிதாக வெளியிட்ட அறிக்கையில், 2022ஆம் ஆண்டு உலகப் பொருளாதார வளர்ச்சி விகிதக் கணிப்பை 3.6 விழுக்காடாகக் குறைத்துள்ளது.

பல்வேறு அறைகூவல்கள் எதிர்கொண்டு உலகப் பொருளாதாரம் நெருக்கடியை எப்படி சமாளிக்கலாம்?சீனா சொல்லிலும் செயலிலும் அமலுக்கு வந்து வழங்கிய முன்மொழிவு அதற்கான பதிலாகும். அதாவது, துண்டிப்புக்குப் பதிலாக இணைப்பை மேம்படுத்துவது.

முன்பு பொருளாதார உலகமயமாக்கம் என்பது உலகளவில் பிரபலமாகியுள்ளது. ஆனால் அமெரிக்கா, பொருளாதாரம் மற்றும் அறிவியல் தொழில்நுட்பத் துறையில் தனது மேலாதிக்கத்தைப் பேணிக்காக்க, சீனாவுடனான பொருளாதாரத் தொடர்புகளைத் துண்டிக்க வேண்டும் என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இத்தகையக் கருத்து, சந்தைத் தேவைக்குப் புறம்பானது என்று மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டு, அமெரிக்காவுடனான சீனாவின் மொத்த வர்த்தக தொகை 75ஆயிரத்து 560கோடி டாலரை எட்டி புதிய உச்சத்தை எட்டயுள்ளது. மேலும் 2022ஆம் ஆண்டின் முதல் 4 மாதங்களில், சீனாவில் அமெரிக்காவின் முதலீட்டுத்தொகை கடந்த ஆண்டின் இதே காலத்தை விட, 53.2 விழுக்காடு அதிகமாகும். மேலும், பணவீக்க உயர்வை கட்டுப்படுத்தும் விதமாக, சீன பொருட்களின் மீதான கூடுதலான சுங்க வரியை ரத்து செய்ய வேண்டும் என அமெரிக்க உள்நாநாட்டின் பல தரப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

உலகின் 2ஆவது பெரிய பொருளாதாரம் மற்றும் மிகப் பெரிய வர்த்தக நாடான சீனா, எப்போதும் உலகமயமாக்கலை ஆக்கப்பூர்வமாக முன்னேற்றி வருகிறது. உலகமயமாக்க முன்னேற்றப் போக்கில் சீனாவுடன் துண்டிப்பு இருந்தால், வாய்ப்புகள் மட்டும் இழந்து விடும்.