தாய்நாட்டுக்குத் திரும்பிய இளம் அறிஞர்களுக்கு ஷிச்சின்பிங்கின் ஊக்கம்
2022-05-20 10:24:12

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொது செயலாளரும் அரசுத் தலைவரும் மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங், மே 18ஆம் நாள், சீனாவின் நான்ஜிங் பல்கலைக்கழகத்திலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்று படித்து தாய்நாட்டுக்குத் திரும்பிய இளம் அறிஞர்களுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பி, வரவேற்பு மற்றும் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இக்கடிதத்தில் அவர் கூறுகையில்,

நீங்கள் பழைய தலைமுறை அறிஞர்களை முன்மாதிரியாகக் கொண்டு, வெளிநாடுகளில் படிப்பை முடித்த பிறகு, தாய்நாட்டுக்குத் திரும்பி, சொந்த பதவியில், தாய்நாட்டுக்கும் மக்களுக்கும் சேவைபுரிந்து நிறைய சாதனைகளைப் பெற்றுள்ளீர்கள். இதை அறிந்து கொண்டு நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான்ஜிங் பல்கலைக்கழகம் நிறுவப்பட்ட 120ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் போது, நான் உங்களுக்கும் எல்லா ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன் என்றார்.

தோழர்கள் அனைவரும் சோஷலிச நவீன நாட்டை உருவாக்கவும், சீனத் தேசத்தின் மாபெரும் வளர்ச்சியை நனவாக்கவும் பங்காற்ற வேண்டும் என்றும் ஷி ச்சின்பிங் விருப்பம் தெரிவித்தார்.