ஜப்பானின் அணு கழிவு நீர் வெளியேற்றத் திட்டத்துக்கு எதிர்ப்பு
2022-05-21 17:06:13

சர்வதேச அணு ஆற்றல் நிறுவனத்தின் தலைமை இயக்குநர் க்ரோஸி ஜப்பானில் 3 நாட்கள் தொடர்ந்த பயணத்தை முடித்துக் கொள்ளும் முன், 20ஆம் நாள் பிற்பகல் டோக்கியோவில் செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். அப்போது அவர் கூறுகையில், அணு கழிவு நீரை ஜப்பான் கடலில் வெளியேற்றும் திட்டம் பற்றிய கவலையைத் தெரிவிக்க ஜப்பான் மக்களுக்கும் அதன் அண்டை நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கும் உரிமை உண்டு. சர்வதேச அணு ஆற்றல் நிறுவனம் ஜப்பானின் இத்திட்டத்தைத் தொடர்ந்து சரிபார்க்கும் என்று தெரிவித்தார்.

இதனிடையே, இத்திட்டத்துக்கு ஜப்பான் மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அணு விபத்துக்குப் பொறுப்பேற்க டோக்கியோ மின்னாற்றல் நிறுவனத்தை வேண்டிய ஃபுகுஷிமா மாவட்ட மக்களுக்கு ஆதரவளிக்கும் விதம், பல நகரவாசி குழுக்கள் 20ஆம் நாள் நண்பகல் டோக்கியோ உயர்நிலை நீதிமன்றத்துக்கு முன் நடவடிக்கையை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.