பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியில் பிரிக்ஸ் நாடுகளின் பங்கு
2022-05-21 16:52:18

19ஆம் நாளிரவு நடைபெற்ற பிரிக்ஸ் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் காணொளி வழியாக உரை நிகழ்த்தி, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியின் முக்கியத்துவத்தை விளக்கினார்.

அந்தந்த மைய நலன்கள் மற்றும் முக்கிய கவனத்தை பிரிக்ஸ் நாடுகள் கருத்தில் கொண்டு, அரசுரிமை, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி துறையில் ஒன்றுக்கு ஒன்று மதிப்பளித்து, மேலாதிக்கத்தையும் வல்லரசு அரசியலையும் எதிர்த்து, பனி போர் சிந்தனையையும் குழு மோதலையும் புறக்கணித்து, மனித பாதுகாப்புக்கான பொது சமூகத்தை உருவாக்க வேண்டும் என்று இவ்வுரையில் ஷி ச்சின்பிங் வலியுறுத்தினார்.

அதேவேளை வளர்ச்சியானது, பிரிக்ஸ் நாடுகள் எதிர்நோக்கும் மற்றொரு முக்கிய கடமையாகும்.

பொது சுகாதார மற்றும் தடுப்பூசி ஒத்துழைப்பை முன்னேற்றும் விதம், பிரிக்ஸ் நாடுகளின் புதிய வளர்ச்சி வங்கி, 100 கோடி அமெரிக்க டாலர் அவசர நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஒவ்வொரு பிரிக்ஸ் நாடும் 100 கோடி அமெரிக்க டாலர் அவசர கடனை வழங்கியுள்ளது.

இப்போது கோவிட்-19 நோய்த்தொற்று தொடர்ந்து பரவி வருகின்ற நிலையில், சர்வதேச பாதுகாப்பும் பொருளாதார மீட்சியும் நிறைய அறைகூவல்களைச் சந்தித்து வருகின்றன. இருப்பினும், பிரிக்ஸ் நாடுகள் ஒன்று கூடி சிறப்பான பங்காற்றினால், உலக வளர்ச்சிக்கு மேலும் பெரும் ஆற்றலை வழங்க முடியும்.