இயற்கைச் சூழல் துறையில் பிரிக்ஸ் நாடுகளின் ஒத்துழைப்பு
2022-05-21 17:07:30

பிரிக்ஸ் சுற்றுச்சூழல் அமைச்சர்களின் 8ஆவது கூட்டம் மே 20ஆம் நாள் காணொளி வழியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட கூட்டறிக்கையில், காலநிலை மாற்றச் சமாளிப்பு, உயிரின பல்வகைமை பாதுகாப்பு, கடல் சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பு மேற்கொள்ளும் விதம், கொள்கை ரீதியான பேச்சுவார்த்தையை வலுப்படுத்தி, கூட்டு ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பசுமையான கரி குறைந்த வளர்ச்சியை கூட்டாக மேம்படுப்படுத்துவது என்ற தலைப்பிலான நடப்புக் கூட்டம் சீனாவின் தலைமையில் நடைபெற்றது. சீன சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் ஹுவாங் ருன்ஜு கூறுகையில், பிரிக்ஸ் நாடுகளின் இயற்கைச் சூழல் ஒத்துழைப்பு, உலகளாவிய இயற்கைச் சூழல் நாகரிக கட்டுமானத்தை முன்னேற்றுவதற்கான இன்றியமையாத ஒரு முக்கிய பகுதியாக மாறியுள்ளது. பிரிக்ஸ் நாடுகள் புதிய சூழ்நிலையின் தேவைக்கிணங்க இயற்கைச் சூழல் ஒத்துழைப்பை ஆழமாக்கி, உலகளாவிய பசுமையான கரி குறைந்த வளர்ச்சிக்கு இயக்காற்றலை வழங்க வேண்டும். 2030ஆம் ஆண்டிற்கான தொடரவல்ல வளர்ச்சி இலக்கின் நனவாக்கம், மனிதகுல பொது எதிர்கால சமூகத்தின் உருவாக்கம், தூய்மையான அழகான உலகின் கட்டுமானம் ஆகியவற்றுக்காக கூட்டு முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.