பிரிக்ஸ் புதிய வளர்ச்சி வங்கியின் இந்திய அலுவலகம்
2022-05-21 17:20:21

பிரிக்ஸ் புதிய வளர்ச்சி வங்கி குஜராத் மாநிலத்தில் இந்திய பிரதேச அலுவலகத்தை நிறுவியுள்ளது என்று இவ்வங்கி மே 19ஆம் நாள் நடைபெற்ற ஆண்டுக்கூட்டத்தில் அறிவித்தது.

இந்தியா மற்றும் வங்காளத்தேசத்தில் அடிப்படை வசதிகளின் கட்டுமானம் மற்றும் தொடரவல்ல வளர்ச்சிக்கான தேவையை நிறைவு செய்யும் விதம் இந்த அலுவலகம் நிறுவப்பட்டது. தெற்காசியாவின் பொருளாதார அதிகரிப்பு மற்றும் தொடரவல்ல வளர்ச்சிக்கு இது துணைப் புரியும் என்றும் இவ்வங்கி தெரிவித்தது.