தைவான் தொடர்பான பிரச்சினையில் சீனாவின் நிலைப்பாட்டுக்கு சர்வதேச சமூகம் ஆதரவு
2022-05-21 19:59:19

உலக சுகாதார மாநாடு மே 22 முதல் 28ஆம் நாள் வரை நடைபெற உள்ளது. இதில் பங்கெடுக்க அழைப்பு பெறவில்லை என்பதால் தைவான் வருத்தம் மற்றும் மனநிறைவின்மையைத் தெரிவித்தது. மேலும், உலக சுகாதார அமைப்புக்கு பல நாடுகள் அனுப்பிய கடிதங்களில், இவ்வாண்டின் உலக சுகாதார மாநாட்டில் சீனாவின் தைவான் பிரதேசம் பங்கெடுக்க அனுமதிக்காத சீன அரசுக்கு ஆதரவு அளித்ததோடு, இம்மாநாட்டில் தைவான் தொடர்பான பிரச்சினை குறித்து எந்த விவாதமும் நடத்த வேண்டாம் என்றும் விருப்பம் தெரிவித்துள்ளன.

இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் மே 21ஆம் நாள் பதிலளிக்கையில், உலகளவில் ஒரே சீனா உள்ளது. சீன மக்கள் குடியரசு சீனாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரேயொரு சட்டப்படியான அரசு ஆகும். தைவான், சீனாவின் உரிமை பிரதேசத்திலிருந்து பிரிக்க முடியாத ஒரு பகுதியாகும். சீனாவின் தைவான் பிரதேசம், உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் நிகழ்வுகளில் பங்கெடுப்பதன் பிரச்சினை, ஒரே சீனா என்ற கொள்கையின்படி கையாளப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.

மேலும், தைவான் சக நாட்டவரின் உடல் நலனுக்கு முக்கியத்துவம் அளித்து வரும் சீன நடுவண் அரசு, ஒரே சீனா என்ற கொள்கையின் அடிப்படையில், உலக சுகாதார விவகாரத்தில் தைவான் பிரதேசம் பங்கெடுப்பதற்கு உகந்த ஏற்பாடுகளை செய்துள்ளது. நாட்டின் அரசுரிமை மற்றும் உரிமை பிரதேசத்தின் ஒருமைப்பாட்டையும், ஐ.நா. பொது பேரவை மற்றும் உலக சுகாதார மாநாட்டின் தொடர்புடைய தீர்மானங்களின் அதிகாரத்தையும் பேணிக்காக்கும் விதம், இவ்வாண்டின் உலக சுகாதார மாநாட்டில் தைவான் பங்கெடுக்க சீனா அனுமதிக்காது. இம்முடிவு பன்னாட்டுச் சமூகத்தின் பரந்த ஆதரவு மற்றும் புரிந்துணர்வைப் பெற்றுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.