சிங்காய்-திபெத் பீடபூமியில் புதிய தேசிய பூங்கா கட்டுமானம்
2022-05-22 16:34:14

மே 22ஆம் நாள், சர்வதேச உயிரின பல்வகைமை தினமாகும். உயிரின பல்வகைமை பாதுகாப்பைச் சீராக மேம்படுத்தும் விதம், இவ்வாண்டில் சீனாவின் சிங்காய்-திபெத் பீடபூமி, மஞ்சள் ஆற்றுப் பள்ளத்தாக்கு, யாங்ச்சி ஆற்றுப் பள்ளத்தாக்கு உள்ளிட்ட முக்கிய இட அமைவு மற்றும் சீரான செயல்திறன் கொண்ட பகுதிகளில், புதிய தேசிய பூங்காக்கள் கட்டியமைக்கப்படும். தேசிய வனவியல் மற்றும் புல்வெளி நிர்வாகத்திலிருந்து கிடைத்த தகவலின் மூலம் இது தெரிய வந்துள்ளது.

மேலும், கடந்த சில ஆண்டுகளாக, அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினங்களைக் காப்பாற்றும் திட்டப்பணியின் மூலம், 90 விழுக்காடு மாதிரியான நிலப்பரப்பு சுற்றுச்சூழல் மண்டல வகைகள் பயனுள்ள முறையில் பாதுகாக்கப்பட்டுள்ளன. 300க்கும் அதிகமான வகைகளைச் சேர்ந்த அரிதான காட்டு விலங்குகள் மற்றும் தாவரங்களின் எண்ணிக்கை நிதானமாக அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.