மேம்படுத்தப்பட்டு வருகின்ற சீன-பாகிஸ்தான் நட்புறவு
2022-05-22 17:08:26

சீன-பாகிஸ்தான் தூதாண்மை உறவு உருவாக்கப்பட்ட 71வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, பாகிஸ்தானுக்கான சீனத் தூதரகத்தில் மே 21ஆம் நாள் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. பாகிஸ்தான் செய்தி மற்றும் வானொலி அமைச்சர் இந்நிகழ்ச்சியில் பங்கெடுத்து, அந்நாட்டின் தலைமையமைச்சர் முஹம்மது ஷாபாஸ் ஷெரீப் வழங்கிய எழுத்து மூல உரையை வாசித்தார்.

ஷெரீப் இவ்வுரையில், பாகிஸ்தான்-சீனத் தூதாண்மை உறவு உருவாக்கப்பட்டது முதல் இதுவரை, இரு நாட்டுறவு மேம்படுத்தப்பட்டு வருகிறது. இரு நாட்டு நட்புறவு மற்றும் ஒன்றுக்கொன்று அளிக்கும் நம்பிக்கையை மேலும் உயர் நிலைக்கு முன்னேற்ற பாகிஸ்தான் முயன்று வருகிறது என்றார்.

பாகிஸ்தானுக்கான சீனத் தற்காலிக தூதர் பாங் ச்சுன்சிவான் கூறுகையில், சீன-பாகிஸ்தான் பொருளாதார பாதையின் கட்டுமானத்தை முன்னேற்றி, பிரதேசத்தின் வளர்ச்சிக்கு நன்மை புரிவதற்கு இரு நாடுகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன என்று தெரிவித்தார்.