இந்தியாவின் பீகார் மாநிலத்தை உலுக்கிய கடும் புயல்
2022-05-22 17:28:03

இந்திய செய்தி ஊடகம் மே 21ஆம் நாள் வெளியிட்ட தகவலின்படி, அந்நாட்டின் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 16 இடங்களில் 19ஆம் நாள் கடும் புயல் மழை, இடி மற்றும் மின்னல் தாக்கத்தால் இதுவரை குறைந்தது 33 பேர் உயிரிழந்தனர். பல மரங்கள் மற்றும் மின் கம்பிகள் விழுந்தன.

இம்மோசமான வானிலையால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உள்ளூர் அரசு உதவியளிக்கும் என்று அம்மாநிலத்தின் முதல் அமைச்சர் தெரிவித்தார்.