சீன-பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை
2022-05-22 19:36:34

சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங்யீ 22ஆம் நாள் குவாங்சோ நகரில் சீனப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவாலுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

வாங்யீ கூறுகையில், சர்வதேச நிலைமை எவ்வாறு மாறினாலும், சீன-பாகிஸ்தான் உறவு இரும்பு போல் உறுதியாக இருக்கும். பாகிஸ்தானுடன் இணைந்து உயர்நிலை பரிமாற்றத்தை நிலைநிறுத்தி, நெடுநோக்கு தொடர்பு, நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்த விரும்பும் சீனா, பாகிஸ்தான் சொந்த நிலைமைக்குப் பொருத்தமான வளர்ச்சிப் பாதையில் முன்னேற ஆதரவளிக்கிறது என்று தெரிவித்தார்.

பிலாவால் கூறுகையில், பாகிஸ்தான்-சீன நட்புறவு, பாகிஸ்தான் வெளியுறவின் அடித்தளமாகும். ஒரே சீனா என்ற கொள்கையைப் பின்பற்றும் பாகிஸ்தான், சீனா தனது மைய நலன்கள் அனைத்தையும் பேணிக்காப்பதற்கு ஆதரவளிக்கிறது என்று தெரிவித்தார்.

நடைமுறைக்கு ஏற்ற பன்முக ஒத்துழைப்புகளை ஆழமாக்குவது, சீன-பாகிஸ்தான் பொருளாதாரப் பாதையின் கட்டுமானத்தை முன்னேற்றுவது, நோய் தொற்று தடுப்பு ஒத்துழைப்பைத் தொடர்ந்து வலுப்படுத்துவது குறித்து அவர்கள் உடன்பட்டுள்ளனர்.

மேலும், ஆப்கான் பிரச்சினை பற்றி கருத்துக்களைப் பரிமாறிக் கொண்ட அவர்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.