துருக்கி அரசுத் தலைவர் நேட்டோ தலைமை செயலாளர் முதலியோருடன் தொலைபேசி தொடர்பு
2022-05-22 16:35:53

துருக்கி அரசுத் தலைவர் எர்டோகன், 21ஆம் நாள், நேட்டோ தலைமை செயலாளர், ஸ்வீடன் தலைமை அமைச்சர், பின்லாந்து அரசுத் தலைவர் ஆகியோருடன் முறையே தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, இவ்விரு நாடுகள் நேட்டோவில் சேர்வது பற்றி விவாதித்தார்.

அடிப்படை பிரச்சினைகளில் குறிப்பாக பயங்கரவாத எதிர்ப்பு பிரச்சினையில் இவ்விரு நாடுகள் துருக்கியுடன் ஒற்றுமையாக நிற்கும் என்று தெளிவாகத் தெரிவிக்கும் வரை, நேட்டோவில் அவை சேர்வதற்கு துருக்கி நேர்மறையான அணுகுமுறையை மேற்கொள்ளாது என்று எர்டோகன் ஸ்டோல்தென்பேர்குடன் தொடர்பு கொண்ட போது தெரிவித்தார்.