தென் கொரிய-அமெரிக்க தலைவர்கள் சந்திப்புக்கு பல குழுக்கள் எதிர்ப்பு
2022-05-22 16:44:46

தென் கொரிய அரசுத் தலைவர் யூன் சியோக்-யூல் 21ஆம் நாள் அந்நாட்டில் பயணமாக வந்தடைந்த அமெரிக்க அரசுத் தலைவர் ஜோ பைடனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதற்குப் பின் தென் கொரிய அரசுத் தலைவர் மாளிகை வெளியிட்ட கூட்டறிக்கையில், தென் கொரிய-அமெரிக்க கூட்டணியின் அடிப்படையில் மேலும் உறவை வலுப்படுத்தி, மைய தொழில் நுட்பம், புதிய தொழில் நுட்பம் மற்றும் இணையப் பாதுகாப்பு தொடர்பான ஒத்துழைப்பை வலுப்படுத்த இருநாட்டு அரசுத் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது. கொரிய தீபகற்ப பிரச்சினை பற்றிய அம்சங்களும் இவ்வறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

அதேநாள், தென் கொரியாவின் பல்வேறு இடங்களைச் சேர்ந்த பல நகரவாசி குழுக்கள் அரசுத் தலைவர் மாளிகையின் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தி, இருநாட்டு கூட்டணியை வலுப்படுத்துவதன் மூலம் வட கிழக்காசியாவில் பதற்ற நிலைமையைத் தீவிரமாக்க முயலும் அமெரிக்காவுக்கு எதிர்ப்பு தெரிவித்தன.