பாகிஸ்தானின் புதிய வெளியுறவு அமைச்சர் சீனாவிற்கு அரசு முறை பயணம்
2022-05-22 17:09:23

சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங்யீயின் அழைப்பை ஏற்று, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவால் பூட்டோ சர்தாரி மே 21 மற்றும் 22ஆம் நாள் சீனாவில் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொள்ள உள்ளார் என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

பிலாவால் பூட்டோ சர்தாரி ஏப்ரல் திங்கள் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சராகப் பதவி ஏற்றதன் பிறகு மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். மேலும், இரு நாட்டுறவின் வளர்ச்சி மற்றும் இரு தரப்புகளின் ஒத்துழைப்புகள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இப்பணயத்தின் போது இரு தரப்பினரும் கலந்தாய்வு நடத்தவுள்ளனர் என்றும் இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.