அமெரிக்காவில் நிகழ்ந்த துப்பாக்கி சூட்டு சம்பவங்கள்
2022-05-22 16:43:46

அமெரிக்காவிலுள்ள துப்பாக்கி வன்முறை பிரச்சினை இன்னும் மோசமாகி வருகிறது. இவ்வார இறுதியில், அமெரிக்காவில் நிகழ்ந்த தொடர் துப்பாக்கி சூட்டு சம்பவங்களில் குறைந்தபட்சம் 3 பேர் உயிரிழந்தனர், 10க்கும் மேலானோர் காயமடைந்தனர்.

21ஆம் நாள் பிற்பகல் இந்தியானா மாநிலத்தில் துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்றில் இருவர் உயிரிழந்தனர், 3 பேர் காயமடைந்தனர்.

20ஆம் நாளிரவு கலிஃபோர்னிய மாநிலத்தில் நிகழ்ந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார், 8 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.