பல நாடுகளில் குரங்கு அம்மை நோய் பரவல்
2022-05-22 16:47:00

இஸ்ரேலில் முதலாவது குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் 21ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு முன், நெதர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிலும் இந்நோயால் ஏற்பட்ட முதலாவது பாதிப்பு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், நோய் அறிகுறி ஏற்பட்டால் உரிய நேரத்தில் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்று பல நாடுகளின் சுகாதார வாரியங்கள் பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன.

மேலும், உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட தரவுகளின்படி, மே 21ஆம் நாள் வரை, குரங்கு அம்மை நோய் பரவலாக ஏற்பட்டிருக்காத 12 நாடுகளில் 92 நோயாளிகளும் 28 ஐயத்துக்குரிய வழக்குகளும் அறிவிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் இந்நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்று இவ்வமைப்பு மதிப்பீடு செய்துள்ளது.