15 நாடுகளில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு
2022-05-23 11:06:16

குரங்கு அம்மை நோய் பாதிப்பு சமீபத்தில் 15 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து, உலகச் சுகாதார அமைப்பு மே 21ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, 13ஆம் நாள் முதல் தற்போது வரை,  முன்பு குரங்கு அம்மை நோய் பரவல் இல்லாத 12 நாடுகளில், 92 நபர்களுக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது மேலும், இந்த தொற்று நோயால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 28 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். இந்நோயால் இதுவரை உயிரிழப்பு ஏதும் ஏற்பட்டவில்லை.