தில்லியில் மோசமான வானிலை
2022-05-23 17:54:39

இந்தியாவின் தில்லியில் மே 23ஆம் நாள் அதிகாலையில் கடும் புயல் மழையுடன் புலத்த காற்று வீசியது. இம்மோசமான வானிலை காரணமாக சில பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமானச் சேவை பாதிக்கப்பட்டது. மேலும், சில பகுதிகளில் மரங்கள் சாய்ந்து, சாலைகள் மூடப்பட்டன.

அடுத்த சில மணி நேரங்களுக்கு தில்லியில் மழை பெய்யும் என்றும் மக்கள் வீடுகளிலேயே தங்கியிருக்குமாறும் வானிலை மையம் கேட்டுக்கொண்டுள்ளது.