ஏபெக் வர்த்தக அமைச்சர்கள் கூட்டம்
2022-05-23 10:50:59

ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்தழைப்பு அமைப்பின் 28ஆவது வர்த்தக அமைச்சர்கள் கூட்டம் 21 மற்றும்  22 ஆகிய நாட்களில் நடைபெற்றது.  21 பொருளாதாரங்களைச் சேர்ந்த வர்த்தக துறை அமைச்சர்கள், தொழில் மற்றும் வணிகத் துறை பிரதிநிதிகள், உலக வர்த்தக அமைப்பு உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களின் பொறுப்பாளர்கள் ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

இதில், சீன வணிகத் துறை அமைச்சர் வாங் வேன்டௌ உரை நிகழ்த்திய போது, உலகளாவிய மற்றும் பிராந்திய பொருளாதாரத்தின் நிலையான வளர்ச்சிக்கு சீனா தொடர்ச்சியான உந்து ஆற்றலைக் கொண்டு வரும். சீனா தொடர்ந்து திறப்பை விரிவாக்கி வருகிறது என்று தெரிவித்தார்.  

அவர் மேலும் கூறுகையில், பன்முகமான உயர் தரமான ஆசிய-பசிபிக் தாராள வர்த்தக மண்டலத்தை உருவாக்குவதில் சீனா உறுதியாகப் பாடுபட்டு வருகிறது. விரிவான பிராந்தியப் பொருளாதாரக் கூட்டுறவு ஒப்பந்தத்தை சீனா நடைமுறைப்படுத்தி வருகிறது. சீன-ஆசியான் தாராள வர்த்தக மண்டலத்தை மேலும் உயர் நிலைக்குக் கொண்டு வர, சீனா ஆசியான் உறுப்பு நாடுகளுடன் இணைந்து ஆக்கப்பூர்வமாகச் செயல்பட்டு வருகிறது. 

வளர்ச்சிச் சாதனைகளை பல்வேறு தரப்புகளுக்கு பயனடையச் செய்யும் விதமாக, உலக வர்த்தக அமைப்பை மையமாகக் கொண்ட பலதரப்பு வர்த்தக அமைப்பு முறையைச் சீனா ஆதரிப்பதுடன், உலக தொழில் சங்கிலி மற்றும் விநியோக சங்கிலியின் பாதுகாப்பையும் நிலைப்புத் தன்மையையும் பேணிக்காக்க உறுதி பூண்டுள்ளது என்றும் அவர் கூறினார்.