அசாமில் வெள்ளப்பெருக்குப் பாதிப்பு
2022-05-23 10:28:43

இந்தியாவின் அசாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநிலத்தின் பேரிடர் மேலாண்மை மையம் 22ஆம் நாள் வெளியிட்ட செய்தியின்படி, தற்போது வரை, வெள்ளப்பெருக்கினால் 8 இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 24ஆக உயர்ந்துள்ளது. 91 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடுமையான வானிலை, வெள்ளப் பெருக்கு முதலிய இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட இலட்சக்கணக்கான மக்கள் இன்னும் ஆபத்தில் உள்ளனர்.