தைவான் சுதந்திரத்துக்கு வழியில்லை:சீனா
2022-05-23 19:01:33

பார்வையாளராக உலக சுகாதார மாநாட்டில் பங்கெடுக்க தைவானுக்கு அழைப்பு விடுக்கும் கருத்துருவை தனது நிகழ்ச்சி நிரலில் சேர்க்க, 75ஆவது உலக சுகாதார மாநாடு தெளிவாக மறுத்துள்ளது. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் 23ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், ஒரே சீனா என்ற கொள்கை சர்வதேச சமூகத்தின் பொது விருப்பமாகவும் ஒட்டுமொத்த போக்காகவும் இருப்பதை இது முழுமையாக நிரூபித்துள்ளது என்று தெரிவித்தார்.

நோய்தொற்றை வாய்ப்பாகக் கொண்டு தைவான் சுதந்திரத்தைப் பெறுவதற்கு எந்த வழியும் இல்லை என்றும், குறிப்பிட்ட சில நாடுகள் சுகாதார விவகாரத்தை அரசியலாக்கும் செயலையும், தைவான் பிரச்சினையின் மூலம் சீனாவின் உள்விவகாரங்களில் தலையிடும் செயலையும் நிறுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.