சீனாவின் விவசாய பண்பாட்டு மரபுச் செல்வங்கள் அதிகரிப்பு
2022-05-24 19:48:34

ஐ.நாவின் உணவு மற்றும் விவசாய அமைப்பு அண்மையில் இணைய வழி ஆய்வின் மூலம், சீனாவின் 3 பாரம்பரிய விவசாய முறைமைகளை உலகளாவிய முக்கிய விவசாயப் பண்பாட்டு மரபுச் செல்வங்களாக அங்கீகரித்துள்ளது. அவை, ஃபூஜியன் மாநிலத்தின் ஆன்சி மாவட்டத்தில் தியேகுவான்யின் தேயிலை பண்பாட்டு முறைமை, உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசத்தின் ஆர்ஹோர்சின் புல்வெளியில் நாடோடி கால்நடை வளர்ப்பு முறைமை, ஹேபெய் மாநிலத்தின் ஷெசியன் மாவட்டத்தில் கல் படிமுறை வயல்களின் மானாவாரி விவசாய முறைமை என்பவையாகும்.

சீன வேளாண் மற்றும் ஊரக விவகார அமைச்சகத்தில் 24ஆம் நாள் கிடைத்த தகவலின்படி, தற்போதுவரை, சீனாவில் உலகளாவிய முக்கிய விவசாயப் பண்பாட்டு மரபுச் செல்வங்களின் எண்ணிக்கை 18ஆக உயர்ந்து, உலகளவில் முதலிடம் வகித்துள்ளது.