ஷிச்சின்பிங்கும் தந்தையும்
2022-05-24 10:51:29

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கும், தனது தந்தை ஷிச்சொங்ஷியுன் போல், சுய நலமின்றி நாட்டுக்காகத் தன்னை  அர்ப்பணித்துள்ளார். அவர் தந்தைக்கு எழுதிய ஒரு கடிதத்தில், நீங்கள் காளை போல சீன மக்களுக்குச் சேவை வழங்கி வந்தவர். வாழ்நாள் முழுவதும் மக்களுக்காகப் போராட வேண்டும் என்று எனக்கு ஊக்கம் அளித்தீர்கள் எனக் குறிப்பிட்டார்.

மக்களின் ஆதரவு இல்லாவிடில், நம்மிடம் எதுவும் இருக்காது என்று ஷிச்சொங்ஷியுன் அடிக்கடி கூறினார்.

விவசாயியின் மகன் என தன்னைக் குறிப்பிடும் ஷிச்சின்பிங், கிராமப்புறங்களில் விவசாயிகளுடன் 7 ஆண்டுகள் வாழ்ந்துள்ளார். அவரும் அவரின் தந்தையும், கிராமப்புற வாழ்க்கை மற்றும் மக்களின் நலனில் வெகுவாகக் கவனம் செலுத்தி செயல்பட்டுள்ளனர்.

மக்கள் தான் நாடு, நாடு தான் மக்கள் என்பதை அவர்கள் எப்போதும் மனதில் நிலைநிறுத்தி வைத்துள்ளனர். மக்கள் நலன் சார்ந்து பணிபுரிய வேண்டும் என்பதுதான் ஷிச்சின்பிங் மற்றும் அவரின் தந்தையின் கொள்கையாகத் திகழ்கிறது.