குவாங்சோவில் வாங்யீ-பேச்லெட் சந்திப்பு
2022-05-24 17:17:01

பயணமாக சீனாவுக்கு வந்த மனித உரிமைக்கான ஐ.நாவின் உயர் ஆணையர் பேச்லெட்டுடன், சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங்யீ மே 23ஆம் நாள் குவாங்சோவில் சந்திப்பு நடத்தினார்.

பேச்லெட்டுக்கு வரவேற்பு அளித்ததோடு, 17 ஆண்டுகளுக்குப் பிறகு மனித உரிமைக்கான ஐ.நாவின் உயர் ஆணையரை சீனா மீண்டும் உபசரிப்பது இருதரப்புக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் வாங்யீ கூறினார்.

5000 ஆண்டுகால நாகரிக மரபுகளுடன் சீனாவின் வளர்ச்சிப் போக்கு மற்றும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சிபுரிதல் சிந்தனை பற்றி வாங்யீ அறிமுகம் செய்தார். மேலும், வாழும் உரிமைக்கான உத்தரவாதத்தை எப்போதுமே முதலிடத்தில் வைக்கும் சீனா, வளர்ச்சி உரிமை மேம்பாட்டை முன்னுரிமையுடன் கூடிய பணியாகவும், குடிமக்களின் சட்டப்பூர்வ உரிமை நலனுக்கான உத்தரவாதத்தை அடிப்படை கடமையாகவும், சிறுபான்மை தேசிய இனங்களின் உரிமை நலன் பாதுகாப்பை முக்கிய அம்சமாகவும் மக்களின் பாதுகாப்பை நீண்டகால இலக்காகவும் கொண்டு பாடுபட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியிலும் மனித உரிமை பாதுகாப்பிலும் பெரும் சாதனைகளைப் பெற்றுள்ள சீனாவுக்கு பேச்லெட் வாழ்த்து தெரிவித்து, மனித உரிமை வளர்ச்சியுடன் தொடர்புடைய துறைகளில் சீனா ஆற்றியுள்ள பங்குகளைப் பாராட்டியதோடு, தனது சீனப் பயணத்தை வாய்ப்பாகக் கொண்டு, இருதரப்பு புரிந்துணர்வு மற்றும் நம்பிக்கையை அதிகரித்து, சர்வதேச மனித உரிமை துறையின் வளர்ச்சியைக் கூட்டாக முன்னேற்ற வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்தார்.