சீன-பிரேசில் உயர்நிலை ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்புக் கமிட்டியின் 6வது கூட்டம்
2022-05-24 16:45:24

சீனத் துணை அரசுத் தலைவர் வாங் ச்சீஷான் மே 23ஆம் நாள் பெய்ஜிங்கிலிருந்து காணொளி வழியாக, பிரேசில் துணை அரசுத் தலைவர் ஹாமில்டன் மௌராவுடன் இணைந்து, சீன-பிரேசில் உயர்நிலை ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்புக் கமிட்டியின் 6வது கூட்டத்துக்குத் தலைமைத் தாங்கினார்.

வாங் ச்சீஷான் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளாக, சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் மற்றும் பிரேசில் அரசுத் தலைவர் போல்சோனரோவின் வழிகாட்டலில், இரு நாட்டு ஒத்துழைப்பு புதிய அத்தியாயம் ஒன்றைத் தீட்டியுள்ளது. சீனாவும் பிரேசிலும் முக்கிய சர்வதேச மற்றும் பிரதேச விவகாரங்களில் நெருங்கிய பரிமாற்றம் செய்து, பலதரப்பு அமைப்புமுறையில் ஒத்துழைப்புகளை வலுப்படுத்தி, புதிய சந்தை வாய்ப்பு பெறும் நாடுகள் மற்றும் வளரும் நாடுகளின் கூட்டு நலன்களைப் பேணிக்காக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

மௌராவ் கூறுகையில், சீனாவுடன் பன்முக நெடுநோக்கு கூட்டாளி உறவுக்குப் பிரேசில் முக்கியத்துவம் அளித்து வருகிறது. ஐ.நா, பிரிக்ஸ், ஜி20 உள்ளிட்ட பலதரப்புக் கூட்டமைப்புக்குள் சீனாவுடன் ஒத்துழைப்புகளை வலுப்படுத்த பிரேசில் விரும்புவதாக தெரிவித்தார்.