சீனாவின் 5 ஜி இணைய வளர்ச்சி
2022-05-24 18:33:39

சீனாவில் சுமார் 16 இலட்சம் 5ஜி தகவல் தொடர்பு நிலையங்கள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளன. உலகில் தனியான முறையில் பெருமளவு 5ஜி இணையத்தை கட்டியமைத்த நாடாக சீனா மாறியுள்ளது.

பெருமளவில் கட்டியமைக்கப்பட்ட 5ஜி இணையம் பல்வேறு துறைகளுக்குத் துணை புரியும்.

கிராமப்புறங்களில் 5 ஜி இணைய சேவை கிடைத்த பிறகு விவசாயிகள் இணையத்தின் மூலம் வேளாண் பொருட்களை விற்பனை செய்யலாம்.

இத்தொழில் நுட்பத்தின் வளர்ச்சியோடு இணைய கல்வி துறை சீராகவும் வேகமாகவும் வளர்ந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.