யூரோவுக்கு எதிரான ரூபிள் மதிப்பு 7 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு புதிய உச்சம்!
2022-05-24 14:13:45

அமெரிக்கா டாலர் மற்றும் யூரோவுக்கு நிகரான ரஷியாவின் ரூபிள் மாற்று விகிதம் தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. மே 23ஆம் நாள்  யூரோவுக்கு நிகாரன ரூபிள் மதிப்பு 59ஆக அதிகரித்தது. இது, 2015ஆம் ஆண்டு ஜுன் திங்களுக்குப் பிறகு இல்லாத அளவிற்கு புதிய உச்சத்தை எட்டியது.

 ஒத்துழைப்புக் கூட்டாளிகளுடனான நேரடி பணப் பரிமாற்றம் அமலுக்கு வந்துள்ளதால், நல்ல பயன் கிடைத்துள்ளது. ரூபிள் மதிப்பு தொடர்ந்து அதிகரிப்பதற்கு இது உதவியளிக்கும் என்று ரஷிய அரசுத் தலைவர் விளடிமிர் புதின் 23ஆம் நாள் தெரிவித்தார்.

 ரஷிய-உக்ரைன் மோதலின் பாதிப்பால் ரூபிள் மதிப்பு வேகமாக சரிந்தது. இதனைச் சமாளிக்க, வட்டியை உயர்த்துவது உள்ளிட்ட பல நடவடிக்கைகளை ரஷியா மேற்கொண்டு வருகிறது.