சீன-பசிபிக் தீவு நாடுகள் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம்
2022-05-24 18:52:36

சீன அரசவையின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, அழைப்பை ஏற்று, மே 26ஆம் நாள் முதல் ஜுன் 4ஆம் நாள் வரை, சாலமன் தீவுகள், கிரிபதி, சமோவா, ஃபிஜி, டோங்கா, வனுவாடு, பப்புவா நியூ கினியா, கிழக்கு திமோர் ஆகிய 8 நாடுகளில் அதிகாரப்பூர்வமாக பயணம் மேற்கொண்டு, ஃபிஜியில் 2ஆவது சீன-பசிபிக் தீவு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்துக்குத் தலைமை தாங்குவார் என்று சீன வெளியுறவு அமைச்சின் செய்திதொடர்பாளர் வாங் வென்பின் மே 24ஆம் நாள் தெரிவித்தார்.

பசிபிக் தீவு நாடுகள் மற்றும் கிழக்குத் திமோருடனான உறவு வளர்ச்சியில் சீனா உயர்வாக கவனம் செலுத்தி வருகின்றது. இந்த நாடுகளுடன் நட்புறவை வளர்ப்பது, இரு தரப்புகளின் நலனுக்குப் பொருந்தி, ஆசிய-பசிபிக் பிரதேசத்தின் அமைதிக், நிதானம் மற்றும் செழுமைக்கும் துணைபுரியும் என்று அவர் தெரிவித்தார்.