சாரா ராண்டி அம்மையாருக்கு ஷிச்சின்பிங்கின் பதில் கடிதம்
2022-05-24 19:51:20

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அண்மையில் அமெரிக்காவின் அயோவா மாநிலத்தைச் சேர்ந்த சாரா ராண்டி அம்மையாருக்குப் பதில் கடிதம் அனுப்பினார்.

அழகான அயோவா மாநிலத்தில் 2 முறை பயணம் மேற்கொண்டு, மாஸ்கடின் நகருடன் நெருக்கமான தொடர்பை உருவாக்கியுள்ளேன். சீன மக்களும் அமெரிக்க மக்களும் தலைசிறந்தவர்களாவர். மக்களிடையே அரிதான செல்வமான நட்புறவு, இருநாட்டுறவின் வளர்ச்சிக்கு முக்கிய அடிப்படையை உருவாக்கும். நட்பார்ந்த பரிமாற்றம், ஒன்றுக்கு ஒன்று நலன் தரும் ஒத்துழைப்பு, இருநாட்டு மக்களின் நலன் ஆகியவற்றை மேம்படுத்தும் விதம், சீன மக்கள் அமெரிக்க மக்களுடன் இணைந்து தொடர்ந்து பாடுபட விரும்புகின்றனர் என்று ஷிச்சின்பிங் இக்கடிதத்தில் தெரிவித்தார். மேலும், ராண்டி அம்மையாரும் அயோவா மாநிலத்தைச் சேர்ந்த பழைய நண்பர்களும் சீன-அமெரிக்க நட்புறவுக்குத் தொடர்ந்து பங்காற்றவும் அவர் ஊக்கமளித்தார்.