ஜப்பான்-அமெரிக்கக் கூட்டறிக்கைக்கு சீனா உறுதியான எதிர்ப்பு
2022-05-24 19:51:41

ஜப்பான் மற்றும் அமெரிக்காவின் தலைவர்கள் மே 23ஆம் நாள் சந்திப்பு நடத்தி, கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டனர். இவ்வறிக்கையில் சீனாவின் மீது அவர்கள் பழி தூற்றியதோடு, பிரதேசத்தில் இராணுவ ஆற்றலை வலுப்படுத்தவும் தூண்டி விட்டனர்.

இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் 24ஆம் நாள் கூறுகையில், சீனா மற்றும் பிரதேசத்திலுள்ள வேறு நாடுகளின் கவனத்தை, ஜப்பானும் அமெரிக்காவும் பொருட்படுத்தாமல் சீனாவுடன் தொடர்புடைய விவகாரங்களைப் பயன்படுத்தி, சீனாவின் மீது பழி தூற்றி, சீன உள் விவகாரத்தில் தலையிடுவது, சர்வதேசச் சட்டம் மற்றும் சர்வதேசக் கோட்பாட்டை மீறி, சீனாவின் அரசுரிமை, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி நலன்களைச் சீர்குலைத்துள்ளது. சீனா இதற்குக் கடும் மனநிறைவின்மை மற்றும் உறுதியான எதிர்ப்பைத் தெரிவிக்கிறது என்று தெரிவித்தார்.