சீனாவின் ஒரு பகுதிதான் தைவான்
2022-05-24 11:00:22

தைவான் உலக சுகாதார மாநாட்டில் பார்வையாளராகப் பங்கேற்பது பற்றி ஒரு சில நாடுகள் முன்வைத்த கருத்துருவை, 75ஆவது உலக சுகாதார மாநாடு 23ஆம் நாள் நிராகரித்தது. தைவான் தொடர்பான இத்தகை கருத்துரு உலக சுகாதார மாநாட்டில் நிகாரகிக்கப்படுவது இது  6ஆவது முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே சீனா என்ற கோட்பாடு, சர்வதேச சமூகத்தின் பொது கருத்து என்பதை இது முழுமையாக காட்டுகின்றது. தைவான், சீனாவின் ஒரு பகுதியாகும். சர்வதேச அமைப்பு உள்ளிட்ட உலகச் சுகாதார அமைப்பில் தைவானின் பங்கேற்பு என்பதும் ஒரே சீனா என்ற கோட்பாட்டின்படி கையாளப்பட வேண்டும்.

நடப்பு உலகச் சுகாதார மாநாடு துவங்குவதற்கு முன்பு ஏறக்குறைய 90 நாடுகள், ஒரே சீனா என்ற கோட்பாட்டில் ஊன்றி நிற்பதாக தெரிவித்து, இம்மாநாட்டில் தைவான் கலந்து கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. நீதியை நிலைநிறுத்தும் உலகில் உள்ள நாடுகள் அமெரிக்க-தைவான் கூட்டு அரசியல் சூழ்ச்சியை ஒருமனதாக எதிர்த்துள்ளன.