அமெரிக்காவில் பைடனுக்குக் குறைந்து வரும் ஆதரவு
2022-05-24 14:10:28

அமெரிக்காவில் அரசுத் தலைவர் ஜோ பைடன் மீதான கருத்துக் கணிப்பில் மக்களிடையே அவருக்கு இருக்கும் ஆதரவு விகிதம் வெகுவாகக் குறைந்து புதிய பதிவை எட்டியுள்ளது.

அமெரிக்க தேர்தல் கருத்துக் கணிப்பு நிறுவனமான “டிசிஷன் டெஸ்க் எச்கியூ”23ஆம் நாள் வெளியிட்ட இக்கணிப்பு முடிவில், 57 விழுக்காட்டு வாக்காளர்கள், பைடனின் பணி செயல்திறனுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.

மேலும், சி.பி.எஸ் நிறுவனம் 22ஆம் நாள் வெளியிட்ட கருத்துக் கணிப்பில் பைடனுக்கான ஆதரவு விகிதம் 43 விழுக்காடு மட்டுமே இருந்தது. ஆதரவின்மை விகிதம் 57 விழுக்காட்டாக உயர்ந்துள்ளது.