2022ஆம் ஆண்டு உலகப் பொருளாதார மன்றத்தின் ஆண்டுக்கூட்டத்தில் சீனப் பிரதிநிதிக் குழு பங்கெடுப்பு
2022-05-25 19:47:53

காலநிலை மாற்றத்துக்கான சீனாவின் சிறப்புத் தூதர் சியே ட்சென்ஹுவாவின் தலைமையில், சீனப் பிரதிநிதிக் குழுவினர் மே 22 முதல் 24ஆம் நாள் வரை ஸ்விட்சர்லாந்தின் தாவோஸ் வட்டத்தில்  உலகப் பொருளாதார மன்றத்தின் 2022ஆம் ஆண்டுக்கூட்டத்தில் பங்கெடுத்தனர். 

24ஆம் நாள் நடத்தப்பட்ட “நமது கிரகம் மற்றும் மனிதக் குலத்தைப் பாதுகாப்பது” தொடர்புடைய தரப்புகளின் பேச்சுவார்த்தையில் சியே ட்சென்ஹுவா சொற்பொழிவாற்றினார். அவர் கூறுகையில், கொள்கைகளின் உருவாக்கம், எரியாற்றல் முறை மாற்றம் மற்றும் காடுகளில் கார்பன் குறைப்பு ஆகிய 3 துறைகளில் சீனா நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று தெரிவித்தார். 

உலகப் பொருளாதார மன்றத் தலைவர் கிளாஸ் ஸ்வாப் மற்றும் தலைமை இயக்குநர் ப்ரெண்டுடனும், பல வெளிநாட்டுத் அரசியல் தலைவர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பொறுப்பாளர்களுடனும் சியே ட்சென்ஹுவா சந்திப்பு நடத்தினார்.