பிரிக்ஸ் நாடுகளின் தொழிற்துறை இணையம் மற்றும் எண்ணியல் தயாரிப்பு வளர்ச்சி குறியீடுகள்
2022-05-25 17:10:37

பிரிக்ஸ் நாடுகளின் தொழிற்துறை இணையம் மற்றும் எண்ணியல் தயாரிப்பு வளர்ச்சி குறியீடுகள் மே 24ஆம் நாள் சீனாவின் ஃபூஜியான் மாநிலத்தின் சியாமென் நகரில் வெளியிடப்பட்டன.

தொழிற்துறை இணையத்தின் குறியீட்டின்படி, அடிப்படை சுற்றுச்சூழலில் சீனாவும் ரஷியாவும் மேம்பாடுகளை பெற்றுள்ளன. சந்தையின் உயிராற்றலைப் பார்க்கும் போது, இந்தியா மற்றும் பிரேசில் முதல் இடங்களை வகிக்கின்றன. இந்தியா மற்றும் சீனாவின் சர்வதேசச் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

எண்ணியல் தயாரிப்பு வளர்ச்சி குறியீட்டின்படி, சீனா இத்துறையின் முன்னணியில் இருக்கிறது. தொழில் வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் அடிப்படையைப் பார்க்கும் போது, இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா முன்னிலையில் உள்ளன.