உச்சி மாநாட்டில் ரஷியா மீதான தடையாணை பற்றி தீர்வு காண சாத்தியம் குறைவு
2022-05-25 14:37:55

மே மாத இறுதியில் நடைபெறவுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறப்பு உச்சி மாநாட்டில் ரஷிய எண்ணெய் தடையாணை குறித்து பல்வேறு தரப்புகளிடையே தீர்வு காணுவதற்கு வாய்ப்பு குறைவு என்று ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லெயன் 24ஆம் நாள் தெரிவித்தார்.

ரஷியா மீதான எண்ணெய் தடை உள்ளிட்ட 6ஆவது சுற்று தடை நடவடிக்கை தீர்மானத்தை ஐரோப்பிய ஆணையம் மே துவக்கத்தில் முன்வைத்தது. ஆனால், ஹங்கேரியின் எதிர்ப்பால் இத்தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை.

உக்ரைன், பாதுகாப்பு, எரியாற்றல் தொடர்பான விவகாரங்கள் குறித்து மே 30 மற்றும் 31ஆம் நாட்களில் ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறப்பு உச்சி மாநாடு நடைபெற உள்ளது.