அமெரிக்க துவக்கப் பள்ளியில் துப்பாக்கிச் சூடு - 19 குழந்தைகள் உயிரிழப்பு
2022-05-25 14:41:23

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் உவால்டி நகரிலுள்ள துவக்கப் பள்ளி ஒன்றில் 24ஆம் நாள் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 19 குழந்தைகள் உள்ளிட்ட 21 பேர் உயிரிழந்தனர் என்று காவல்துறை தெரிவித்தது.

உள்ளூர் உயர்நிலை பள்ளியைச் சேர்ந்த 18 வயது மாணவர் இத்துப்பாக்கி சூட்டிற்கு காரணமானவர். துவக்கப் பள்ளிக்குச் செல்லும் முன்னதாக தனது பாட்டியை அவர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார் என தெரிய வந்தது.

இச்சம்பவம் பற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.