சீன-ஜெர்மனி வெளியுறவு அமைச்சர்களின் காணொளி பேச்சுவார்த்தை
2022-05-25 15:59:30

சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங்யீ மே 24ஆம் நாள் ஜெர்மனி வெளியுறவு அமைச்சர் அன்னலெனா பேர்பாக் அம்மையாருடன் காணொளி வழியாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

வாங்யீ கூறுகையில், இவ்வாண்டு சீன-ஜெர்மனி தூதாண்மை உறவு உருவாக்கப்பட்ட 50ஆவது ஆண்டு நிறைவாகும். இரு நாட்டுறவின் சீரான வளர்ச்சி இரு தரப்புகளின் பொது நலன்களுக்குப் பொருந்தியது. அத்துடன், உலக அமைதி, நிலைப்புத் தன்மை மற்றும் வளர்ச்சிக்கு இரு நாடுகள் ஆக்கப்பூர்வப் பங்காற்றுவதற்கு இது துணைப் புரியும் என்று தெரிவித்தார்.

பேர்பாக் கூறுகையில், சீனா, ஜெர்மனியின் முக்கிய ஒத்துழைப்புக் கூட்டாளியாகும். இரு நாட்டுத் தூதாண்மை உறவு உருவாக்கப்பட்ட 50ஆவது ஆண்டு நிறைவை வாய்ப்பாகக் கொண்டு, இரு நாட்டுறவின் வளர்ச்சியை மேலும் முன்னேற்ற வேண்டும் என்று விரும்புகின்றேன். மேலும், சுற்றுச்சூழல் மேலாண்மை, காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சீனாவுடன் ஒத்துழைப்புகளை வலுப்படுத்த விரும்புகிறேம் என்று தெரிவித்தார்.

தவிர, உலக விவகாரங்கள், உக்ரைன் நெருக்கடியால் ஏற்பட்ட தானிய பிரச்சினை, ஆப்கான் சூழ்நிலை உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்தும் இரு தரப்புகள் கருத்துக்களைப் பரிமாற்றிக் கொண்டனர்.